Posted by admin on 04-07-2026
*காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.32 ஆயிரம் பறிமுதல். 10 ஒப்பந்ததாரர்கள் மூலம் அதிகாரிகள் ஜி-பே க்கு ரூ.15 லட்சம் அனுப்பியதும் கண்டுபிடிப்பு*
சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.32 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீஸார்,
10 ஒப்பந்ததாரர்கள் மூலம் அதிகாரிகள் ஜி-பே க்கு ரூ.15 லட்சம் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சிவகங்கை லஞ்சஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் கண்ணன், ஜேசுதாஸ் தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை இரவு வரை தொடர்ந்தது.
அப்போது கணக்கில் வராத ரூ.32 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஒவ்வொரு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஜி-பேயில் பண பரிமாற்ற விவரங்களையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.
இதில், 10 ஒப்பந்ததாரர்கள் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலரின் வங்கி கணக்குகளுக்கு 10 மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் ஜி- பே க்கு ரூ.15 லட்சத்து 74 ஆயிரம் வரை அனுப்பியதை கண்டறிந்தனர். மேலும் அவர்களிடம் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.