Posted by admin on 26-06-2026
திருவேகம்பத்தூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம்: 31 ஜோடி மாடுகள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூர் அருகே உள்ள நீடோடை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஜோடி மாடுகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தின.
பெரிய மாடு, சிறிய மாடு மற்றும் பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், பெரிய மாட்டு பிரிவில் 11 ஜோடி மாடுகள், சிறிய மாட்டு பிரிவில் 16 ஜோடி மாடுகள் மற்றும் பூஞ்சிட்டு பிரிவில் 11 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
பெரிய மாட்டு பிரிவிற்கான பந்தய எல்லை 8 மைல் தூரமாகவும், சிறிய மாட்டு பிரிவிற்கான எல்லை 6 மைல் தூரமாகவும், பூஞ்சிட்டு பிரிவிற்கான எல்லை 5 மைல் தூரமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்ற காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. காளையார்கோவில், புலியடித்தம்பம், திருவேகம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று போட்டியை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
போட்டியின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி
காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி
4 மாவட்டங்களில் இருந்து 52 ஜோடி கிடாய்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்ட
உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள்–ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அமைச்சர் டி.கே பிரபு பங்கேற்பு
உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மூன்று மாவட்டங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதல்
காரைக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் டி.கே. பிரபு
சிவகங்கையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! காரைக்குடியில் முகாமை தொடங்கி வைத்த அம
Leave a Comment
Your comment will be visible after admin approval.