Posted by admin on 25-06-2026
108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை, FHS அமரர் ஊர்தி சேவை மற்றும் 102 ஆம்புலன்ஸ் சேவை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
EMRI Green Health Services மற்றும் The Eye Foundation கண் மருத்துவமனை இணைந்து, சிவகங்கை 108 ஆம்புலன்ஸ் அலுவலக வளாகத்தில் இந்த முகாமை நடத்தின. இதில் 108, FHS மற்றும் 102 ஆம்புலன்ஸ் சேவைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் பங்கேற்றவர்களுக்கு கண் பார்வை பரிசோதனை, கண் நோய்கள் குறித்த ஆலோசனைகள் மற்றும் தேவையான மருத்துவ வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. மேலும், கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மதுரை ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ் பாண்டியன், கண் மருத்துவர் பார்த்தசாரதி, கண் மருத்துவ ஆலோசகர் கண்ணகி, 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.எம். சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.
அவசர மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இந்த இலவச கண் பரிசோதனை முகாம் பங்கேற்பாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இதுபோன்ற நலத்திட்ட முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என பயனாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலபசலைப் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து
இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து – போட்டி போட்டு முந்திச் செல்ல முயன்றதால் 25-க்கும் மேற்பட்டோர் காயம்
ராமநாத
காரைக்குடியில் வாலிபர் கொலை
காரைக்குடியில் வாலிபர் கொலை - போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி KMC மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில
காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி
காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி
4 மாவட்டங்களில் இருந்து 52 ஜோடி கிடாய்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்ட
Leave a Comment
Your comment will be visible after admin approval.